ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் ஓண்டோ மாகாணத்தின் அரசாங்கப் பகுதியான ஓரேயில் எண்ணெய் டேங் வெடித்ததில் மூன்று குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி உட்பட 20 பேர் பலியாகியுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமையை ஆய்ய மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
டேங்கில் இருந்து எரிபொருளை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபர்களில் ஒருவர் வைத்திருந்த போன் தீப்பற்றியதால் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஓண்டோ மாநில அரசின் அறிவுறுத்தலின் பேரில், பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
இந்த எண்ணெய் டேங் வெடித்து சிதறிய விபத்தால், அப்பகுதியே தீப்பிழம்புடன் காட்சியளித்தது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
https://twitter.com/DrumzGt/status/1683431711231582210?s=20