TikTok தளம், Twitter போன்று எழுத்துப் பதிவுகளை செய்யக்கூடிய அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளது.
அது Twitter தளத்திற்குப் போட்டியாக அமையக்கூடும் என்று கூறப்படுகிறது.
தற்போது உள்ள TikTok செயலியிலேயே அந்தப் புதிய அம்சம் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஏதேனும், வர்ணத்தைப் பின்னணியாகத் தேர்ந்தெடுத்து, அதில் எழுத்துகளுடன் இசையும் ஸ்டிக்கர்களும் சேர்க்கலாம்.
இந்தப் புதிய அம்சம் TikTok பயன்படுத்தும் அனைவரின் புத்தாக்கத்தையும் விரிவுபடுத்தும் என்று TikTok நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
TikTok செயலியை மாதந்தோறும் சுமார் 1.4 பில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர்.
Facebook, Instagram ஆகிய தளங்களின் உரிமையாளரான Meta நிறுவனம் அண்மையில் Twitterக்குப் போட்டியாக Threads என்ற செயலியை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.