உக்ரேன் மீது ரஷ்யா நடத்தியதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களின் ஆதாரங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் (ICC) பகிர்ந்துகொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தமது நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
எனினும், அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு அதை ஏற்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு செய்தால், வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கத் படைகள் மீது அரசியல் ரீதியான வழக்குத் தொடுக்க அது வழியமைத்துவிடும் என்று அஞ்சப்படுகிறது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினைக் கைது செய்யும்படி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த (2023) மார்ச் மாதம் ஆணை பிறப்பித்தது.
அவர், உக்ரேனிலிருந்து பிள்ளைகளைக் கடத்தியதாகச் சந்தேகம் வெளியிட்டப்பட்டுள்ளதுடன், அவ்வாறு செய்வது ஒரு போர்க்குற்றம் ஆகும் என தெரிவிக்கப்படுகின்றது.