இசையை ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றிலுமாக தடை செய்யும் தலிபான்கள். ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய குறுகிய காலத்திலிருந்தே தமது கடும்போக்கு தீவிர கொள்கையை நடைமுறை படுத்திவரும் நிலையில்,
அப்படியான சம்பவத்தையே தற்போது செய்துள்ளனர்.பெண்களுக்கான பல தடைகளை விதித்த தலிபான்கள் தற்போது இசைக்கும் தடை வித்தித்துள்ளனர்.இதுபோல் சினிமா, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும், பொது இடங்களில் இசையை இசைப்பதற்கும் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
இசை என்பதை அவர்கள் தம் பார்வையில் இவ்வாறு கூறுகின்றனர் “இசையை ஊக்குவிப்பது தார்மீக ஊழலை ஏற்படுத்துகிறது மற்றும் அதை இசைப்பது இளைஞர்களை வழிதவறச் செய்யும்” எனவும்
நூற்றுக்கணக்கான டொலர்கள் மதிப்புள்ள இசைக்கருவிகளை மற்றும் உபகரணங்களை தீயிட்டு எரித்துமுள்ளனர்.