பூக்களை சூடும் பூமியின் மடியில்
மௌனமாய் ஓடும் சவக்குழிகளின்
ரேகை கட்டியது யாரோ அறிவார் எவரோ
முப்பாட்டனாலும் ஆண்ட நம்நிலத்தில்
தலையணை வைத்து உறங்குவது
நம் உறவின் மடியில்
தமிழனாய் பிறந்தது தவறா- இல்லை
வாழ நிலம் கேட்டது தவறா
சிங்கள உறவே உங்களின் எதிரிகள்
நாமல்ல
வாழ்வதற்கு வழிகிடைக்குமா
நிலம் கிடைக்குமா என்ற ஆசையில்
பெற்ற பட்டம் பயங்கரவாதிகள்
பச்சிளம் குழந்தையை தார் பீர்பாயிலும்
அக்கா தங்கைகளை வன்புணர்வு செய்து
கொலை செய்தோமா
எரிகின்ற தீயில் தூக்கி வீசினோமா
மதிகெட்ட மானுடம் பார்த்த சதிவலையில்
சிக்கி சின்னாபின்னம் ஆகிய எம்மவர்
மத்தியில் எமக்காய் ஒருவன் உதித்தினான்
இன்றுவரை சொல்லு நண்பா ஒரு தமிழன்
ஒரு சிங்கள பெண்ணின் அனுமதியில்லாது
அங்கம் முகர்த்ததுண்டா
தமிழன் ஓர் பயங்கரவாதி எனும் வாசகம்
உங்கள் வாய்களில் வார்த்தையாய்
பரவச்செய்தவன் ஓர் பயங்கரவாதி
தாய்நிலம் பறித்து இருந்தவன் ஓர் பயங்கரவாதி
பச்சிளம் குழந்தையை கொன்றவன் ஓர் பயங்கரவாதி
அம்மா அக்கா தங்கைகளை கண்முன்னே புணர்ந்தவன் ஓர் பயங்கரவாதி
உழவு பூட்டி உணவருந்த எமக்கோர் நிலம்
நிம்மதியாய் உறங்க எம்கோர் நிலம்
பரம்பரை வாழ்ந்த பூமியில் என் பிள்ளை
நிம்மதியாக வாழ ஓரிடம் கேட்டோம்
கொலைக்களம் புகுந்து புதைகுழியாய்
எவ்விடம் பார்ப்பினும் செம்மணி தொடக்கம்
கொக்குத்தொடுவாய் வரை வரையறையின்றி
நம் உறவுகள்
எக்குழியில் தேடுவேன் காணாமல் போன எம் உறவுகளை என்சொந்தம் எமக்காய்
தந்த நிலம் அக்குழி அறியுமோ நம்மவர்
புதைகுழி என்று
வலிகளாலும் கொலைகளாலும் செதுக்கப்பட்ட
புதைகுழியில் இருந்து அவல குரலாய்
தேடுகிறாள் என் அம்மா
இங்கே இருக்கின்றேன் தூக்குங்கள் என்னை
என்றால் அப்பாவிடம் மகள்
கத்துவதும் கதறுவதும் தெரியாமல் மகளை தேடும் என் அப்பா
மனைவியை விட்டு பிரிந்து குழிகளை எட்டி பார்க்கும் கணவன்
தம்பிக்காய் இனிப்புகள் கையில் வாங்கி குழிகள் தோறும் என் அக்கா
வாய்விட்டு அழ முடியாமல் அம்மணமாய் தூங்கும் என் உறவுகள் மத்தியில் யாரிடம் கோருவோம் எமக்கோர் சுதந்திரம்
புதைகுழிகள் ராஜ்ஜியமாய் தோண்ட தோண்ட
துள்ளி எழும் தமிழனின் உணர்வுகள் கனவுகளாய் காலங்கள் பல மறைந்து இன்னும் மலரும்
புதைகுழிகள்
எண்ணுங்கள் பேரினவாதிகள்
ரட்ச்சத புதைகுழி என்போம் எமினம்
மாண்ட நிலம்
பசுமையாய் சுவாசித்த நம்பரம்பரை
கொலைவாள் நீட்டி கொன்று குவித்த இந்த பூமி
புதைகுழிகளின் பூமியல்லவோ பார்க்கலாம் விரல்விட்டெண்ண முடியாத நம் உறவின் உடலை இந்த புதைகுழிகளின்(கொலைகள)பூமியில்….
கேசுதன்