குற்றங்களாலும் குறைகளாலும் சூழப்பட்ட
மனித வாழ்வில் வலிகள் மறைக்கப்பட்ட
மனங்களுக்கிடையே வாழ்வியல் வளர்க்கும்
நெஞ்சங்களும் உண்றல்லவோ
பாறையிடுக்கில் படரும் பாசிகள் போல
நெஞ்சத்து வடுக்களை சுமந்த தேகங்களும்
ஒற்றை உயிராய் சிலிர்த்து நிற்கும்
தேகமோடு வாழ வழிதந்த இறைவன்
வடுக்களையும் தர மறுப்பதில்லை
துன்புறா நெஞ்மொன்று தடம்மாறாதென்பதல்ல
குறைகளை கண்டிரா மனமும் குற்றம்
காண்பதே காலத்தின் வடு
தொய்வுற்ற நெஞ்சமும் செங்காலை
விடியற்காணவே தெளிவோடு மயங்கும்
கீற்றுக்கள் ஒலிப்பதெல்லாம் ஒரு காலம்
கட்டாயத்தின் பெயரில் வளர்க்கப்பட்ட
கட்டிடங்களின் நடுவே இரைச்சல்களுடன்
கூடிய ஊர்திகளும் கூவிச்செல்லும்
வடுக்களை சுமந்த மனங்களும் இறைவனை
தேடும் ஒரு பொழுதாய் அமையலாயிற்று
அவனுக்கோர் பொழுதுபோக்காய் பம்பரமாய்
ஆட்டுவிப்பான்
தீன் சுவைத்தந்த கைவண்ணமும் இயந்தியமயமாயிற்று வழிசொல்வார் வருவாரோ
இடையில் சுமந்த குடமும் இல்லை
பானையில் வடித்த சோறுமில்லை என்றாயிற்று
வாழ்வியலும் இயந்திரமயமானது மக்கள் நெஞ்சத்து குற்றங்களும் குறைகளும் இலைமறை காயாக ஒன்றித்தே ஒழிக்கப்படுகிறது வாழ்வியலின்
இரகசியமாய்….
கேசுதன்