பசிபிக் பகுதியில் உள்ள நியூசிலாந்து, தனது பாதுகாப்புத் திறன்களை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து அந்த நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் ஆண்ட்ரூ லிட்டில் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “நாட்டின் தற்போதைய பாதுகாப்புச் செலவு பொருளாதாரத்தில் 1 சதவீதமாக உள்ளது.
“நாடு தற்போது சைபர் தாக்குதல்கள், பயங்கரவாதம் போன்ற உள்நாட்டு அச்சுறுத்தல் மற்றும் எல்லை பகுதிகளில் பதற்றத்தை எதிர்கொள்கிறது.
“எனவே, காலாவதியான போர்க்கப்பல்கள் மற்றும் ரோந்துக்கப்பல்களை மாற்ற வேண்டும். இதனால் பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சீனா தனது இராணுவத்தை நவீனமயமாக்குவதற்கு தொடர்ந்து அதிக முதலீடு செய்து வருகிறது.
இதனால் பசிபிக் கடற்பகுதியில் உள்ள நாடுகளிடையே பதற்றம் அதிகரித்து வருகிறமை காரணமாகவே நியூசிலாந்து தனது பாதுகாப்புத் திறன்களை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.