சுகாதார அமைச்சுப் பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் கோரிக்கை எதையும் விடுக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
‘சுகாதார அமைச்சுப் பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி உங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் எனச் சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளனவே?’ என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே கெஹலிய இவ்வாறு கூறினார்.
“இல்லை, எனது குடும்ப உறுப்பினர்தான் இந்த கோரிக்கையை விடுத்தனர். ஆனால், விமர்சனங்களை எதிர்கொண்டவாறு சவால்களை சந்திப்பேன் எனக் கூறியுள்ளேன். பல பொறுப்புக்களை வகித்தவன் நான். எனவே, சவால்களைக் கண்டு ஓட முடியாது. அதனை எதிர்கொள்ள வேண்டும். குடும்பத்தாரை என்னால் சமாளிக்க முடியும். வெளி தரப்பில் இருந்து அவ்வாறானதொரு கோரிக்கை விடுக்கப்படவில்லை.” – என்றும் அவர் மேலும் கூறினார்.