கோடைக்காலத்தில் அம்மை நோய் , வயிற்றோட்டம் , வியர்கூர், தோல் வீக்கம் , சூட்டு கட்டி , சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் , உடல்சூடு, வயிற்றுக்கு கோளாறு என பல நோய்களை சந்திக்க நேரிடும் . இவற்றை தவிர்க்க குளிர்ச்சியான உணவுகளை சாப்பிட வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்து உணவு , பழங்களை சாப்பிட வேண்டும்.நிறைய தண்ணீர் குடித்து உடல் வறட்சி அடையாமல் ஈரப்பதத்தை தக்க வைக்க வேண்டும்.
துரித உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும் அதிக வெப்பத்தில் சமைப்பதால் கிருமிகள் பரவ வாய்ப்பு உள்ளது. சோடா உப்பு மற்றும் தண்ணீரை கொண்டு வாரம் ஒருமுறை பிரிட்ஜை துடைக்க வேண்டும். சமையலறையில் பயன்படுத்தும் துணிகளை துவைத்து வைத்து கொள்ள வேண்டும் இதனால் பூஞ்சைகள் கிருமிகள் உண்டாவதை தடுக்கலாம். இறைச்சி, முட்டை, பால் போன்ற உணவுகளை நன்கு சமைத்து உண்ண வேண்டும்.
கோடைக்காலத்தில் உடலில் வியர்வை நாற்றத்தை குறைக்க நிறைய தண்ணீர். குடிக்க வேண்டும் கீரைகள், ஓரேஞ் , அன்னாசிப்பழம் ஆகியவற்றை அதிகம் சாப்பிடலாம் . இவற்றில் உள்ள நார்சத்துக்கள் தீவிர உற்பத்தியைக் குறைக்கும். மேலும் சாதாரண சோப்பை உபயோகிப்பதை விட பக்ரீரியாளை ஒழிக்கும் சோப்பை பயன்படுத்துங்கள் இரண்டு முறை கட்டாயம் குளியுங்கள்.