0
மேல் நீதிமன்ற நீதிபதி எம்.சி.பி. சஞ்சீவ மொராயஸ், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக, நீதிபதி சோபித ராஜகருணா ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார்.