கொரோனா தொற்று பரவல் காலக்கட்டத்தில் “வீட்டிலிருந்து வேலை” எனும் முறைமைக்கு பக்க பலமாக Zoom சேவை இருந்தது.
இப்போது Zoom நிறுவனத்தின் ஊழியர்களையே மீண்டும் அலுவலகத்திற்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலையிடத்திலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தூரம் வரை வசிக்கும் ஊழியர்கள் வாரத்திற்கு இரு முறையாவது அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும்.
அந்த நடைமுறையே ஆக அதிக பலன் அளிக்கக்கூடியது என்று Zoom நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது.
இப்புதிய மாற்றம் இம்மாதம் ஓகஸ்டும் அடுத்த மாதம் செப்டெம்பரும் நடைமுறைப்படுத்தப்படும் என்று BBC செய்தி நிறுவனம் அறிக்கையிட்டுள்ளது.
Amazon, Disney உட்பட உலகின் பல பெரிய நிறுவனங்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நாள்களைக் குறைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.