தமிழ் சினிமாவில் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்பதை அறிமுகம் செய்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்பதும் தனது முந்தைய படத்தை கேரக்டர்களை அடுத்தடுத்த படங்களில் புத்திசாலித்தனமாக இணைத்து LCU அதாவது ‘லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்’ என்ற பெயர் பெற்றார் என்பது தெரிந்ததே.
இந்நிலையில் இயக்குனர் நெல்சன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ’ஜெயிலர்’ படத்தை பார்ப்பதற்கு முன்னர் தனது ’கோலமாவு கோகிலா’ மற்றும் ’டாக்டர்’ படங்களை பாருங்கள் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதை அடுத்து ’ஜெயிலர்’ படமும் சினிமாட்டிக் யுனிவர்ஸ் படமாக இருக்குமோ என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நெல்சன் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது ’ஜெயிலர்’ படத்தை இயக்குவதற்கு வாய்ப்பு கொடுத்த கலாநிதி மாறன் அவர்களுக்கும் இந்த படத்திற்கு இசையமைத்த அனிருத் அவர்களுக்கு எனது நன்றி. எங்கள் குழுவினர் 18 மாதங்கள் கடுமையாக உழைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் குறிப்பாக ரஜினிகாந்த் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி என கூறியுள்ளார்