மலையக எழுச்சி நடைபயணத்துக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் டொமோயா ஒபோகடவும் தனது முழு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
மலையகத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக முன்னெடுக்கப்படும் நடைபயணத்தை முழுமனதாக ஆதரிப்பதாகவும், மலையகத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, மேம்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் நவீன அடிமைத்தனத்தின் சமகால வடிவங்கள், அதன் காரணங்கள் மற்றும் விளைவுகள் தொடர்பான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் டொமோயா ஒபோகட வலியுறுத்தியுள்ளார்.