ஆடி அமாவாசை, சித்திரா பௌர்ணமி போன்ற தினங்களில் இலங்கையை ஆண்ட சிவ பக்தனான இராவணன் தனது தாய்க்கு பிதுர் தர்ப்பணம் செய்த இடமாக கருதப்படும் கன்னியா வெண்ணீரூற்றில் பிதுர் தர்ப்பணம் செய்வது விசேடமானது.
கன்னியா சிவன் ஆலயத்தில் இன்றைய தினம் காலை ஏழு மணி அளவில் ஆடி அமாவாசையை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்று, சிவனுக்கு அபிஷேகம் நடந்து, அதன் பின்னர் பிதுர் தர்ப்பணம் செய்ய வந்திருந்தவர்கள் கன்னியா வெண்ணீர் ஊற்றி தேர்ப்பை அணிந்து தீர்த்தமாடினர்.
பின்னர் தங்களுடைய இறந்த உறவுகளை நினைத்து தானம் வழங்கி பூஜையில் பங்கு கொண்டனர்.