0
பாகிஸ்தானின் கரச்சியில் இருந்து இஸ்லாமாபாத்தை நோக்கி இன்று அதிகாலை பயணிகள் பேரூந்தில் 40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
அந்த பஸ், பஞ்சாப் மாகாணம் பிண்டி பட்டியன் அருகே பைசலாபாத் நெடுஞ்சாலையில் சென்ற போது டீசல் ஏற்றி சென்ற லொரி மீது மோதியது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 16 பேர் பலியானார்கள். 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர். இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.