கடந்த பல மாதங்களில் எக்ஸ் தளத்தில் பெயர் மற்றும் லோகோ உள்பட ஏராளமான மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்திய மாற்றத்தின் படி எக்ஸ் பயனர்களுக்கு உலகளவில் வருவாய் பங்கீட்டு திட்டத்தின் கீழ் கணிசமான தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் 2014 மற்றும் அதற்கும் முன்பு பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் இணைய முகவரிகள் மாயமாகி வருவதாக பயனர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ட்விட்டர் தளத்தில் இருந்து வரும் பில்ட்-இன் யு.ஆர்.எல். ஷார்ட்னர் கொண்டு பகிரப்பட்ட இணைய முகவரிகள் மற்றும் புகைப்படங்கள் தளத்தில் இருந்து மாயமாகி இருக்கிறது.