யாழ்ப்பாணம் மாநகரில் ஐஸ் போதைப்பொருளை ஊசி மூலம் எடுத்துக்கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
26 வயது இளைஞரே யாழ்ப்பாணம் மாநகர் கொட்டடியில் உள்ள அவரது வீட்டில் நேற்று (21) மாலை உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகரில் பிரபல வர்த்தக நிலையம் நடத்தி வந்த தந்தையார் வெளிநாடு சென்ற நிலையில் தாயாருடன் வாழ்ந்து வந்த குறித்த இளைஞர் போதைக்கு அடிமையாகி இருந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.