செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் பசி | நீலகாந்த் சைகியா | ஷிவ்திவாரி | வசந்ததீபன்

பசி | நீலகாந்த் சைகியா | ஷிவ்திவாரி | வசந்ததீபன்

1 minutes read
_______________________________________
என்ன சாப்பிடக் கொடுப்பேன் உனக்கு
என்னுடைய ஸேனிமாயி?
ஆகையால் நதியின் பக்கம் தள்ளுகின்றன, போ
நதியில் உணவு கிடைக்குமா, அம்மா?
மீன் கிடைக்கும், தவளை கிடைக்கும், ஏதோ கிடைக்கும் சாப்பிட,
எதுவும் கிடைக்கவில்லை என்றால் தண்ணீரைக் குடி.
தண்ணீரில் எனக்கு கதை யார் சொல்லுவார்கள், அம்மா?
கடற்கன்னி சொல்லுவார்,
தங்கப் படகில் அமர்த்தி ஏழு சமுத்ரங்களை சுற்றிக் காட்டுவாள்
இங்கே பலகை இருக்கிறது இல்லை புத்தகம்
நதியில் நான் பள்ளிக்கூடம் போவேனா  , அம்மா?
கடற்கன்னி கொணடு வந்து தருவாள்,
உன்னுடைய புத்தகங்கள் இருக்கும், பள்ளிக்கூடம் இருக்கும்,
படித்து எழுதி மேதையாவாய் நீ.
இங்கே உனக்கு என்ன சாப்பிடக் கொடுப்பேன், ஸேனீமாயி?
பல நாட்களாக வீட்டில் எதுவும் இல்லை
நிலம் உடன் தரவில்லையென்றால் தண்ணீரிடம் போ,
தண்ணீரில் ஏதாவது தேடிச் சாப்பிடு.
( மோரிகாவ் மாவட்டத்தில் பஞ்சமும் பட்னியுமான நிகழ்வுகள் நிகழ்ந்தன, அவை மீண்டும் நிகழக் கூடாது என்ற இந்த ஆசையோடு.)
பெங்காலியில் :  நீலகாந்த் சைகியா
ஹிந்தியில் : ஷிவ்திவாரி
தமிழில் : வசந்ததீபன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More