முகப்பரு தழும்புகள் மறைய வேண்டுமா சிலருக்கு முகப்பரு தழும்புகள் மறையாமல் முக அழகை கெடுக்கும் அதற்கான தீர்வு இதோ
வெந்தயத்தை பேஸ்ட் போல் அரைத்து பேஸ் மாஸ்க் போட்டு பின் கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.
ஒலிவ் எண்ணெய் தொடர்ந்து முகத்தில் தடவி வந்தால் பரு தழும்புகள் மறையும்.
சிறிது சந்தன பவுடர் மற்றும் பன்னீர் சேர்த்து .நன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு பின் நல்ல சுத்தமான நீரில் கழுவி வர முகப்பரு தழும்புகள் மறையும்.
தினமும் ஒரு கப் கிறீன் டீ அருந்தி வந்தால் முகத்தில் கருப்பு தழும்புகள் நீங்கும்.
ஒரு கரண்டி உப்பை றோஸ் வோட்டர் கலந்து முகத்தில் மென்மையாக ஸ்க்ரப் செய்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும் வாரம் ஒரு முறை இதை செய்து வந்தால் கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.