ருமேனியாவில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதுடன், காயமடைந்தோர் எண்ணிக்கை 46ஆக அதிகரித்துள்ளது.
குறித்த நிலையத்தில் நடந்த முதலாவது வெடிப்பில் 8 பேர் காயமடைந்ததுடன், இரண்டாவது வெடிப்பில் குறைந்தது 26 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்ததாக அவசரகால அதிகாரிகள் தெரிவித்தனர்.
ருமேனியாவின் தலைநகரான புக்கரெஸ்டில் இருந்து வடமேற்கே 30 கிலோமீட்டர் (18 மைல்) தொலைவில் உள்ள கிரெவேடியா நகரில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ருமேனியாவின் சுகாதார அமைச்சர் அலெக்ஸாண்ட்ரு ரஃபிலா, ஒருவர் இறந்ததை உள்ளூர் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தினார்.
பல தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக புக்கரெஸ்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.