சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இதுவரை இல்லாத அளவு இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் சில காட்சிகளை தான் பார்த்ததாகவும் அப்போது படம் வெறித்தனமாக அமைந்திருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்ததாகவும் இந்த படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் கூறியுள்ளார்.
‘கங்குவா’ படத்தின் சில காட்சிகளை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மிகவும் அபாரமாக இருந்தது. சூர்யா அவர்கள் தனது கேரக்டரில் மிகச் சிறந்த அளவில் நடித்துள்ளார். சிறுத்தை சிவாவின் திரைக்கதை வெறித்தனமாக இருந்தது. காட்சிகள் பிரமாண்டமாகவும் பிரேம்களில் மிகவும் அழகாகவும் இருந்தது’ என்று தேவிஸ்ரீ பிரசாத் கூறினார்.
அதுமட்டுமின்றி தனக்கு ’புஷ்பா’ திரைப்படத்திற்காக தேசிய விருது கிடைத்ததற்கு சூர்யா தனக்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் என்றும் கூறியுள்ளார்.
ஒரு சில காட்சிகளை பார்த்தே இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஆச்சரியமடைந்துள்ளார் என்றால் முழுப்படமும் எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள் கற்பனை செய்து வருகின்றனர்.
சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படம் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையில், வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் மற்றும் யூவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.