யாழ்ப்பாணம், வடமராட்சி, தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இன்று (28) அங்கப் பிரதிஷ்டை செய்த அடியவர் திடீரென சுகவீனமுற்ற நிலையில் சாவடைந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னையா சுரேஷ்குமார் (வயது 57) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சடலம், உடற்கூற்றுப் பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்புக்கான காரணம் உடற்கூற்றுப் பரிசோதனைக்குப் பின்பே தெரியவரும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.