மாத்தறை, அக்குரஸ்ஸ – பங்கம தெதியகல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த 25 வயதுடைய பெண், மாத்தறை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர், படுகாயமடைந்த பெண்ணின் மைத்துனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர், அக்குரஸ்ஸ பகுதியில் துப்பாக்கியுடன் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.