இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நாட்டிங் ஹில் கலாசார திருவிழா வருடாந்தம் நடைபெற்று வருகின்றது.
கரீபிய மக்களின் கலாசாரம், கலைகள் மற்றும் பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில் ஓகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில் இந்த விழா நடைபெறும்.
இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளும் இந்த திருவிழா, கொரோனா தொற்றுக் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் நடைபெறவில்லை.
இந்நிலையில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்களுடன் இந்தத் திருவிழா நேற்று கோலாகலமாக ஆரம்பித்தது.
முதல் நாளான நேற்று இந்த விழாவில் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை பலர் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டதுடன், போதைப்பொருள் வைத்திருந்த 85 பேரை இங்கிலாந்து பொலிஸார் அதிரடியாக கைது செய்தனர்.