அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக தன்னைக் களமிறக்குவதற்கு தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது என்று அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
கட்சியின் நிறைவேற்றுக் குழுவால் நேற்று மாலையே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
‘ஹிரு’ தொலைக்காட்சியில் நேற்றிரவு ஒளிபரப்பான ‘சலகுண’ அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அநுர இந்தத் தகவலை வெளியிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ பெயரிடப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியும் தமது வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அறிவித்துள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் குழப்ப நிலை இருக்கின்றது.