மகாபாரதம் உணர்த்தும் உண்மைகள் ஒவ்வரு கதாப்பாத்திரங்கள் வடிவில் வெளிப்பட்டுள்ளன
சத்தியம் செய்து விட்டால் சங்கடத்தில் மாட்டிவிடுவாய். கங்கை மைந்தனாய்
பெற்றோர்கள் செய்யும் பாவங்கள் பிள்ளைகளை பாதிக்கும் . கெளரவராய்
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். பாண்டுவாய்
பேராசை உண்டாக்கும் பெரும் அழிவினையே துரியோதனனாய்
வஞ்சனை நெஞ்சில் கொண்டால் வாழ்வனைத்தும் வீணாகும்.சகுனியாய்
கூடா நட்பு கேடாய் முடியும். கர்ணனாய்
ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு குந்தியாய்
சொல்லும் வாரத்தை கொ ல்லும் ஓர்நாள் பாஞ்சாலியாய்
குரோதம் கொண்டால் விரோதம் பிறக்கும் திருதராஷ்டினனாய்
தலைக்கனம் கொண்டால் தர்மமும் தோற்கும் யுதிஷ்டிரனாய்
பலம் மட்டுமே பலன் தராது பீமானாய்