சிங்கப்பூரில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு, இன்று (01) நடைபெற்றுவருகிறது.
இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மக்கள் வாக்களிக்கலாம்.
தற்போது 1,264 வாக்களிப்பு நிலையங்களில் மொத்தம் 2,302,996 சிங்கப்பூரர்கள் வாக்களித்துவிட்டனர்.
தகுதிபெற்ற வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கையில் அது சுமார் 85 சதவீதம் ஆகும்.
இந்திய வம்சாவளி தமிழருக்கு வாய்ப்பு
சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் எதிர்வரும் 13ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கேபினட் அமைச்சு பதவியில் இருந்த தர்மன் சண்முக ரத்னம், தனது பதவியை இராஜினாமா செய்தார்.
ந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம், சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான காச்சோங், டான்தின் லியான் ஆகியோர் இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
இந்நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்மனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.