சமூக வலைத்தளங்களில் Egg Crack Challenge என்ற தலைப்பில் உள்ள வீடியோக்கள் குறித்து வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
குறித்த வீடியோக்களில் பிள்ளைகளின் தலை மீது விளையாட்டாக பெற்றோர் முட்டையை உடைப்பர்.
Egg Crack Challenge என்ற இந்த இணையச் சவால் தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது.
TikTok தளத்தில் #eggcrackchallenge என்ற தலைப்பில் உள்ள வீடியோக்கள் மொத்தம் 77.4 மில்லியன் முறை பார்வையிடப்பட்டுள்ளன.
எனினும், பிள்ளைகள் சால்மோனெல்லா என்ட்டெரிட்டிடிஸ் (Salmonella Enteritidis) எனும் நச்சுக்கிருமியால் பாதிக்கப்படும் ஆபத்தும் இருப்பதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
அவ்வாறு நேர்ந்தால் பிள்ளைகளை வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டியிருக்கலாம் என்றும் வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சமைக்கப்படாத முட்டையில் Salmonella Enteritidis நச்சுக்கிருமி இருக்கும் சாத்தியம் உண்டு.
மேலும், முட்டையைத் தலையில் உடைக்கும்போது பிள்ளைகளின் முகத்தைப் பார்த்துப் பெற்றோர் சிரிக்கின்றனர்.
பிள்ளைகள் அதை அவமானமாகக் கருதக்கூடும். அதனால் பெற்றோர் மீதான நம்பிக்கையைப் பிள்ளைகள் இழக்க நேரிடலாம் என்றும் வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
Le dernier défi Tik Tok #eggcrackchallenge provoque les critiques des internautes et une vive colère contre des parents sur les réseaux sociaux. pic.twitter.com/nkNQuxeXR8
— Hespress Français (@HespressFr) August 26, 2023