பிரண்டையுடன் சிறிது மிளகாய் சேர்த்து அரைத்து சுண்டைக்காய் அளவுக்கு தினந்தோறும் இரு வேலை சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குணமாகும்.
பிரண்டை தண்டுகளை சிறிய அளவில் நறுக்கி ரசத்தில் சேர்த்து வந்தால் எலும்புகள் பலம் பெரும். மேலும் நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் கப நோய்கள் நீங்கும்.
பிரண்டையை பச்சையாக ,நன்றாக அம்மியில் வைத்து மை போல் அரைத்து அடிபட்ட வீக்கத்தில் வைத்து கட்டினால் வீக்கம் ரத்தகட்டு குணமாகும்.
பிரண்டை ,இலந்தை ,வேப்பம் ஈர்க்கு முருங்கை விதைகள் , ஓமம் இவைமுறைப்படி குடிநீரிலிட்டு குடிக்க வயிற்று புழுக்கள் நீங்கும்.
பிரண்டையின் வேரை வெந்நீரில் குலைத்து மேற்புறமாக பூசி வர வீக்கம் குறையும் .
எலும்பு பலவீனமானவர்கள் எலும்பு முறிவு உள்ளவர்கள் பிரண்டையை தொடர்ந்து பயன்படுத்தலாம்.வாயு பிடிப்பு , கை மற்றும் கால் குடைச்சல் இருப்பவர்களுக்கு பிரண்டை சிறந்த மருந்தாக உள்ளது வயிற்று பொருமல் ஏற்படும் போது பிரண்டையை சூப்பாக செய்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் மற்றும் மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் அதிக வலியை போக்கி நல்ல நிவாரணம் அளிக்கிறது. இளம் பிரண்டையை குழம்பு, துவையல்,ரசம்,வத்தல் என ஏதேனும். ஒரு வகை சமையலில் பயன்படுத்தலாம்.
பிரண்டையிலிருந்து தயாரிக்கப்படும் உப்பு சித்த மருத்துவத்தில் குடல் சார்ந்த நோய்க்கு பெரு மருந்த்தாக பயன்படுகிறது. மேலும் ரத்த மூலத்தை காட்டுக்குள் வைக்கிறது.