“அமைச்சரவையில் இருந்தும், அரசியலில் இருந்தும் என்னை முடக்க எதிர்க்கட்சி வகுத்துள்ள சதித் திட்டம் இன்று மாலை படுதோல்வியடையும்.”
– இவ்வாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராகப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது. இது தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சுகாதார அமைச்சுக்கு எதிராக எதிரணி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் ஏற்க முடியாதவை. நாட்டின் தற்போதைய நிலைமை அறியாது எதிரணி செயற்படுகின்றது.
எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் இன்று முறியடிக்கப்படும். எமது அரசின் பெரும்பான்மைப் பலம் இன்று மீண்டும் நிரூபித்துக் காட்டப்படும்” – என்றார்.