0
ஒரு நாளில் ஒரு தடவையேனும் முன்னிற்ப்பேன்
நிலைக் கண்ணாடியுடன் மெளனமொழியில் உரையாடியபடி
சிரித்தால் சிரிக்கும்
முறைத்தால் முறைக்கும்
உள்ளதைக் காட்டும்
உண்மையைக் கூறும்
ஒருமுறை
நொருங்குண்ட என் இதயம்
துணை தேடிச் சென்றது கண்ணாடி முன்
விம்மினேன், அழுதேன், ஓவெனக் கதறினேன்
பதிலுக்கு விம்மியது, அழுதது. ஓவெனக் கதறவில்லை
ஏன் கதறவில்லை??
ஏனோ இரு கரங்கள் நொருக்கியது நிலைக் கண்ணாடியை
சி. அபினுசா.
விடுகை வருடம்,
பேராதனை பல்கலைக்கழகம்