பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் என்னவென்று நாம் அறிந்து கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகவும்.காலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளான நேரத்துக்கு பிரம்மா முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் எழுந்திருப்பதே சந்தேகத்திற்குரிய மறுபிறவி தான் எனவே ஒவ்வொரு நாள் காலையிலும் இந்த சிருஷ்டி மறுபிறவி பெறுவதை படைத்தல் என்று சொல்லலாம் .
இத்தொழிலை செய்பவர் பிரம்மா எனவே இவரது பெயரால் விடியற் காலை பொழுதை ” பிரம்ம முகூர்த்தம் “என்று வைத்துள்ளார்கள் இந்துக்கள் .
இன்னொரு விசேடம் உங்களுக்கு தெரியுமா இந்த பிரம்ம முகூர்த்த நேரத்துக்கு திதி , வார நட்சத்திரம் ,யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுப வேளை தான் . இந்த நேரத்தில் எழுந்து குளித்து எதை செய்து வந்தாலும் சிறப்பாகும்.