செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை திருகோணமலை சம்பவத்திற்கு புலம்பெயர் தமிழர் அமைப்புகள் கண்டனம் 

திருகோணமலை சம்பவத்திற்கு புலம்பெயர் தமிழர் அமைப்புகள் கண்டனம் 

1 minutes read

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை புலம்பெயர் தமிழர் அமைப்புகள் கூட்டாக கண்டித்துள்ளன.

அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் பிரித்தானிய தமிழர் பேரவை அயர்லாந்து தமிழர் பேரவை தென்னாபிரிக்காவின் அமைதி சமாதானத்திற்கான ஆதரவு குழு சுவிஸ் தமிழர் செயற்பாட்டு குழு அமெரிக்க தமிழர் செயற்பாட்டு குழு என்பன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளன.

புலம்பெயர் தமிழர் அமைப்புகள் மேலும் தெரிவித்துள்ளதாவது

இலங்கையில் அரச ஆதரவுடனான குடியேற்றம் இலங்கை இராணுவ ஆக்கிரமிப்பு ஆகியவற்றை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் அரசியல்கைதிகள் விடுதலை ஆகியவற்றை வலியுறுத்தி உண்ணாவிரதப்போரட்டம் மூலம் அகிம்சை வழியில் போராட்டத்தை முன்னெடுத்;து 1987 இல் திலீபன் உயிர்நீத்தார்.

அவரது கோரிக்கைகள் இன்றும் துயரம் தரும்விதத்தில் பொருத்தமானவையாக உள்ளதால் தமிழ் மக்கள் அவரை இன்றும் நினைவுகூருகின்றனர்.

இந்த காடையர்களின் தாக்குதல் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அவருடன் சென்றவர்களை இலக்குவைத்து மாத்திரம் இடம்பெறவில்லை,திலீபனின் உருவப்படங்களை கிழித்த அவர்கள் அந்த படங்களை சுமந்து சென்ற வாகனங்களையும் அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவங்கள் பொலிஸார் பார்த்துக்கொண்டிருக்கையில் இராணுவமுகாமிற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

இது இலங்கையின் அரசாங்கத்தின் ஆட்சி தகுதியற்றவர்களின் கரங்களில் உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.

பாரம்பரிய தமிழர் தாயகத்தில் -சிங்கள காடையர்கள் இலங்கை பொலிஸாரின் உதவியுடன்  நடத்திய அமைதிப்பேரணியின் மீதான இந்த கட்டுக்கடங்கா வன்முறைசெயல் உயிர்இழந்தவர்களை  நினைவுகூருவதற்கான சர்வதேச சட்டங்களை மீறும் செயலாகும்.

 

புலம்பெயர்ந்தவர்களான நாங்கள் இந்த தாக்குதலை கடுமையாக கண்டிக்கும் அதேவேளை சர்வதேச சமூகத்தின் பயனற்ற நடவடிக்கைகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். சர்வதேச சமூகத்தின் இத்தகைய நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தை போலியான வாக்குறுதிகள் மூலம்  ஏமாற்றுவதற்கும் மீள நிகழாமையை உறுதி செய்வதற்கான கட்டமைப்பு மாற்றங்களை மேற்கொள்ளாமலிருப்பதற்கும் வழிவகுத்துள்ளது.

சர்வதேச சமூகம் விழித்துக்கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்காதவரை  இலங்கையில் மனித உரிமை நிலவரம் மேலும் மோசமடையும் நாடு  தொடர்ந்தும் தோல்வியை நோக்கி தள்ளப்படும்

எவ்வாறாயினும் தங்கள் உரிமைக்காக போராடும் தமிழ் மக்களின் ஆன்ம உறுதி மரணிக்காது என புலம்பெயர்அமைப்புகள் தெரிவித்துள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More