கிளி ப்பிப்பிள் அணியிற்கும் யாழ் மருத்துவக்கல்லூரி் பழையமாணவர்கள் சங்க அணிக்கும் இடையில் டொக்டர் மோகன் நினைவுக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கிளி பீப்பிள் அணி வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
கடந்த 16ஆம் திகதி ஐக்கிய இராச்சியத்தில் Lyca Cricket ground , ilfordஇல் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை காண நூற்றுக்கணக்கான கிரிக்கெட் ஆர்வலர்கள் திரண்டிருந்தனர்.
உடலினை வலுச் செய்தல், நிதி திரட்டுதல், தாயகத்திற்கு கைகொடுத்தல், விளையாட்டுக்களை ஊக்குவித்தல் என பல்வேறு எண்ணங்களை கொண்டு முன்னெடுக்கும் இத்தகைய நிகழ்வுகளில் அனைவரும் பங்கெடுப்பதும் ஒன்றிணைந்து செயற்படுவதும் அவசியமாகும்.