2
வனாந்தரத்தில் அனாதியாய்
தனித்து விடப்பட்ட விலங்குகள்
யாரிடமும் கேட்பதில்லை
வீடு திரும்புதலுக்கான வழிகளை
காகக் கூட்டில்
ஏதிலிகளாய் கைவிடப்பட்ட
இளங்குயில்கள் மறந்து போவதில்லை
தங்கள் பழைய கீதங்களை
மந்தைக் கூட்டமொன்றிலிருந்து
தவறுண்டு போன
செம்மறிக்குட்டிகளின் ஓலம்
கேட்பதே இல்லை
எந்த மேய்ப்பர்களுக்கும்
வௌவால்களும்
காகங்களும் கூட
வீடடையும் இந்த அந்தியில்
முகவரிகளற்ற
அனாதைச்சிறுவர்கள் வானத்தில்
துலாவிக் கொண்டிருக்கின்றனர்
தம் வீட்டின் நிழலை..
வில்வரசன்