வத்தளை, பள்ளியாவத்தை கடற்கரையில் இனந்தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது எனக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வத்தளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 65 முதல் 70 வயதுக்குட்பட்ட 5 அடி 5 அங்குல உயரத்துடனும், மெலிதான உடலுடனும், மஞ்சள் நிற அரை கைச்சட்டையுடனும், சாம்பல் நீளமான காற்சட்டையுடனும், வெள்ளை முடியுடன் காணப்படுகின்றார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.