சிவ ரகசியம் :
யாரை ஏமாற்றினாலும் ஏமாற்றலாம் நம்மை நெருங்கி வரும் மரணத்தை ஏமாற்ற முடியாது.
காமத்தை விட்டு புறப்பட்டு தியானம் செய் கெடுதல் நினையாதே மாதா பிதாவை வணங்கு அவர்கள் என்றும் நன்மை செய்வார்கள்.
ஒன்பது துவாரமுள்ள மரத்துண்டு இரத்த பந்தத்தால் உருவாக்கத்தக்க துர்நாற்றத்தையுடைய பாண்டம்.
மலமும் ஜலமும் நிறைந்த பெரியபெட்டி வந்த தெல்லாம் கொள்ளும் பேராசை பெட்டி
வாதம் பித்தம் சிலேஷ்மாம் என்கின்ற மும்மலங்களும் வாசம் செய்கின்ற சிறிய ஊர்
வினை குரும்பி ஈகைகள் நிறைந்த கழனி வேர்வையினால் புழுங்கி ஊத்தை யொட்டிய அற்புத தோலால் புழுங்கும் உப்பு நிறைந்த களர் நிலம்.
புழுதி மிகுந்த சுடுகாட்டு கட்டை பிணிகள் எப்பொழுதும் வீணாவதற்குள்ள இடம்
சோற்றை அடைத்திருக்கும் தொப்பை காற்று நிறைந்த தோல் துருத்தி
அமைப்பின்படி எமனால்கட்டப்பட்டு வெட்டப்பட கூடிய சுடுகாட்டு நெருப்பிற்கு இருக்கின்ற விருந்து
காமத்தீயால் கருகி போகும் உலர்ந்த இலை புழுக்களால் கிண்டப்படுகின்ற கிழங்கு தோல்
உபயோகமில்லாமல் பிணமாக படுக்கும் பிண்டம் செத்த பிறகு ஊரில் இருக்கக்கூடாது.
எலுப்பாலும் நரம்பாலும் கட்டப்பட்ட தோலால் முடிய குடிசை மிகுந்த வெறுப்பை உடைய பல விலைகளை நிறைந்த பெரும் குப்பை.
ஆசையாகிய கயிறிலினால் ஆடுகின்ற பம்பரம் காற்றில் பறந்தோடுகின்ற பதராகிய உடல் இந்த உறுப்புகள்.
தியானம் செய் முயற்சி செய்தால் எதையும் அடையலாம்.