திருப்பதி பிரமோற்சவ விழாவில் நேற்று இரவு சர்வபூபால வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
தொடர்ந்து இன்று இரவு 7 மணிக்கு கருட சேவை நடக்கிறது. தங்க கருடவாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளுகிறார்.
இதில் சுமார் 3 லட்சம் முதல் 4 லட்சம் வரை பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கருட சேவையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இதேவேளை, கோவில் முகப்பு முதல், பஸ் நிறுத்தம் வரை சுமார் 5 கிலோமீட்டர் தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அதிகமாக கூடிய இடங்களில் நெரிசல் ஏற்பட்டது.
பக்தர்களுக்கு தேவையான நீர், உணவு, பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளதுடன், கருட சேவையை முன்னிட்டு திருமலைக்கு பக்தர்கள் மோட்டார் சைக்கிளில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கோவிலில் சாமி தரிசனத்துக்கு 24 மணி நேரமாகிறதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.