நாம் ,எம்மில் பலர் வரும் பிரச்சனைகளை கண்டு உடைந்து போகின்றோம் சமாளிக்கும் வல்லமை ஆற்றவராக இருக்கின்றோம்.
இத்தகைய நம்மாய் வழிநடத்த விவேகானந்தரின் சொந்த வாழ்வில் நடந்த எது நடந்தாலும் சமாளித்து கொள்ளலாம் என்ற கதையை பார்ப்போம்.
ஒரு நாள் விவேகானந்தர் லண்டனில் உள்ள அவரது நண்பரின் இல்லத்துக்கு சென்று இருந்தார். அது இயற்கை வளம் கொண்ட பண்ணை வீடு அப்போது விவேகானந்தரும் அவரது நண்பரும் மற்றும் நண்பரின் மனைவியும் காலாற நடக்க ஆரம்பித்தனர். அப்போது அந்த பண்ணையில் இருந்த மாடு தன் கட்டை அவிழ்த்து கொண்டு வேகமாக விவேகானந்தரை நோக்கி வந்தது இதை பார்த்த நண்பனின் மனைவி அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார்.நண்பன் மாடு கிட்டவரவே வேலி ஒன்றை நோக்கி ஓட்டம் பிடித்தார். மாடும் ஓடும் அவரின் பின்னால் கலைக்க ஆரம்பித்தது . ஆனால் விவேகானந்தர் மாத்திரம் எந்த சலனமும் இன்றி நின்ற இடத்திலேயே நின்றார்.
அதன் பின் அங்கு வேலை செய்பவர் மாட்டை கட்டினார். நண்பனின் மனைவியும் மயக்க நிலையில் இருந்து எழுப்பப்பட்டார் . நண்பன் விவேகானந்தரை பார்த்து “எவ்வாறு பயமின்றி அதே இடத்தில் நின்கறீர்கள்” அதற்கு விவேகானந்தர் சொன்னார். நம்மை நோக்கி ஒரு பிரச்சனை வருகின்ற போது மரணமே ஆனாலும் சமாளித்து விடலாம் என்ற மன உறுதியுடன் இருந்தால் ஒழிய துன்பங்கள் நம்மை துரத்த ஆரம்பித்து விடும் என்றார்.