பிரித்தானியாவை தளமாகக்கொண்டு இயங்கும் தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் நாச்சியார் இவன்ஸ் உடன் இணைந்து நடாத்தும் 24வது கோடை விளையாட்டு விழா இவ்வாண்டு கோலாகலமாக எதிர்வரும் வங்கி விடுமுறை தினமான இம்மாதம் 31ம் திகதி நடைபெற உள்ளது.
பல புதிய விடையங்களுடன் நடைபெறும் இவ் விளையாட்டு விழா இவ்வாண்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பொன்று கடந்த 21ம் திகதி மேற்கு லண்டன் கிறிஸ்டல் மண்டபத்தில் TSSA மற்றும் நாச்சியார் இவன்ஸ் ஏற்பாட்டில் நடைபெற்றது
துடுப்பாட்டம், வலைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம் மற்றும் தாயக விளையாட்டுப் போட்டிகளுடன் பல்வேறு நிகழ்வுகளாக ஆணழகன் போட்டி, அழகுராணிப் போட்டி, கரகாட்டம், பாடலும் ஆடலும், ராப் மற்றும் பங்கார பாடல்களும் நடைபெற உள்ளது.