0
நெடுந்தீவு கிழக்கு பகுதி கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டதால் உயிரிழந்தவரை அடையாளம் காணமுடியாத நிலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் தடயவியல் பொலிஸார் சடலம் கரையொதுங்கிய பகுதிக்கு சென்று பார்வையிட்டனர்.
உயிரிழந்தவரின் சடலத்தை அடையாளம் காண்பதற்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக நெடுந்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.