கிளிநொச்சி மாவட்ட சதுரங்க சங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தும் மாபெரும் சதுரங்க போட்டி சுமார் 500 போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் போட்டி எதிர்வரும் 7 ஆம் 8 ஆம் திகதிகளில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.
தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட சதுரங்க சங்கத்தின் தலைவர் சிவரூபன் அவர்களின் ஊடக சந்திப்பு ஒன்று இன்று கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் வளாகத்தில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் தனிப்பட்ட போட்டியாளர்களிடமிருந்து பெறுமளவான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இதன் போது அவர் தெரிவித்துள்ளார்.
வணக்கம் இலண்டன் இணையத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அபியகம் பெருமையுடன் அனுசரனை வழங்கும் இந்த நிகழ்வு கிளிநொச்சி மகா வித்தியாலத்தில் அக்டோபர் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.