யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமராட்சி, துன்னாலைப் பகுதியில் நெல்லியடி பொலிஸார் நேற்று மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் அந்த நபருக்குத் தொடர்பு இருக்கின்றது எனவும், வவுனியாவைச் சேர்ந்த அந்த நபர் நீண்ட காலமாகத் துன்னாலைப் பகுதியில் வசித்து வந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 28 வயதுடைய சந்தேகநபர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரைப் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதேவேளை, அல்வாய் பகுதியில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை பருத்தித்துறை பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஒருவரைக் கைது செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.