இன்னும் கலைக்கப்படாத மௌனம்
இனத்தின் பெரும் சாபம்
புத்திசாலித் தனத்தின் பின்வாங்கல்
புரியாதமாறுபாட்டின் திண்டாடல்
மௌனத்தின் போக்கில் கடந்துபோதல்
காலத்தின் சாபத்தின் தேடல்
மாறுபட்ட பாதையில்
மறுபடியும் மாறி மாறித் திரியும்
மந்தபுத்தியின் தெளிவற்ற
அமைதியான மௌனம்
இனத்தை கொன்ற ஆயுதம்
கற்பதை விடுத்து கண்டதைக் கேட்டு
சபைக்கு முன்னே கக்குவதும்
கேட்டு மௌனிகளாக கடந்து போகும்
செவியற்ற யடமாவதும்
இனத்தின் இருப்பை அழித்த
மௌனம்
காலம் ஒருபோதும் மன்னிக்காத பாவம்
வட்டக்கச்சி வினோத்