புதிய பொலிஸ்மா அதிபரை விரைவில் நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மொட்டுக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கட்சியின் சார்பில் மேற்படி கோரிக்கையை விடுத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பொலிஸ்மா அதிபர் பதவி என்பது முக்கியத்துவம்மிக்கது. எனவே, அரசமைப்புப் பேரவைக்கு தமது யோசனையை முன்வைத்து, புதிய பொலிஸ்மா அதிபரை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலை ஒத்திவைப்பது போல் பொலிஸ்மா அதிபர் நியமனத்தையும் ஒத்திவைத்துக் கொண்டிருக்க முடியாது.” – என்றார்.
அதேவேளை, வரவு – செலவுத் திட்டம் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் ரோஹித அபேகுணவர்தன எம்.பி. முன்வைத்தார்.