புலம்பெயர்ந்து வாழும் பதினைந்து எழுத்தாளர்களின் வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்ட ஒரு சர்வதேச கதைத் தொகுப்பில், இலங்கையின் இரு தமிழ் எழுத்தாளர்களின் அனுபவங்களிலிருந்து உருவான கதையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
கனடாவில் வாழும் 15 புலம்பெயர் எழுத்தாளர்களின் வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கிய The Uncaged Voice என்ற புத்தகம், கொமோரான்ட் புத்தக வெளியீட்டாளர்களால் ஒக்டோபர் 21 அன்று கனடாவில் வெளியிடப்பட்டது.
இந்த சர்வதேச கதைத் தொகுப்பில் இலங்கையை விட்டு வெளியேறிய இரண்டு தமிழ் எழுத்தாளர்களான இளமாறன் நாகராசா மற்றும் திஷாலி இளமாறன் ஆகியோரின் “Maran’s Unknown Journey” கதையும் அடங்கும்.
இந்த 248 பக்கங்களில் அச்சிடப்பட்ட புத்தகத்தில், வாழ்க்கை அனுபவங்கள், பேச்சு சுதந்திரம், சர்வாதிகாரம், பத்திரிகை கலாசாரம் போன்ற கதைகளின் சாராம்சம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
“The Uncaged Voice” இல் உள்ள கட்டுரைகள் சில சமயங்களில் மிருகத்தனமாகவும் இதயத்திற்கு இதமானதாகவும் இருக்கும்.
கீத் ரோஸ் லெக்கியால் தொகுக்கப்பட்ட இந்த புத்தகத்தில் மேரி ஜோ லெடியின் அறிமுகம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஊடகபச் சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் வெறும் இலட்சியமாக இருக்கும் நாடுகளில் வாழும் ஊடகவியலாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் துணிச்சலையும் சகிப்புத்தன்மையையும் இந்தக் கட்டுரைகள் காட்டுகின்றன.
எரித்திரியாவின் ஆரோன் பெர்ஹான் (Aaron Berhane), எத்தியோப்பியாவின் கெசாஹேகன் எம். டெமிசி (Gezahegn M. Demissie), வெனிசுலாவின் அலெக்சான்டர் டுரேட் (Alexander Duarte), குர்திஷ்சின் ஆவா ஹோமா ((Ava Homa), ஈரானின் மஹ்தி சரேமிஃபர் (Mahdi Saremifar), சிரியாவின் அதுல்ரஹ்மான் மாதர் (Adulrahman Matar), மெக்சிகோவின் லூயிஸ் ஹொராசியோ நஜெரா (Luis Horacio Nájera), பாகிஸ்தானின் கிரண் நாசிஷ் (Kiran Nazish), கொலம்பியாவின் பெட்ரோ ஏ. ரெஸ்ட்ரெபோ (Pedro A. Restrepo), ஈரானின் மரியா சபா (Maria Saba), ஈரானின் பேராசிரியர் காசிவா சாலிஹ் ((Kaziwa Salih, PhD),) ஆப்கானிஸ்தானின் பிலால் சர்வே (Bilal Sarway), இந்தியாவின் சாவித்திரி (Savithri), துருக்கியின் அர்சு யில்டிஸ் (Arzu Yildiz) ஆகிய கனடாவில் வாழும் 15 எழுத்தாளர்களின் கதைகள் அடங்கியுள்ளன.