கொழும்பு – மருதானையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து 21 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருதானை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியைக் கலைக்கப் பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் செய்தனர். அதன்பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களில் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொழும்பில் உள்ள சுகாதார அமைச்சு நோக்கி மருத்துவ பீட மாணவர்களால் எதிர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் கட்டடத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.