இலக்கு அற்ற வாழ்கையை தருகிறது தற்போதைய கல்விமுறை.,..
உயர்கல்விக்கு தெரிவாகும் மாணவர்களில் வெறும் பத்துவீதமானவர்களே பட்டப்படிப்புபெற தெரிவாகிறார்கள். மிகுதியுள்ளவர்களின் நிலைபற்றி யாரும் கவலைப்படுவதில்லை. அவர்கள் தனியார் துறையில் பட்டம் பெற்றாலும் நேர்முகத் தேர்வுகளில் ஊதாசீனம் செய்யப்படுகிறது. ஒரு பத்து வீதமாணவர்களை புத்திசாளி மற்றும் அறிவாளியாக்கும் ஒரு முறைக்கு கீழ்தான் இந்த கல்விமுறை இருக்கிறது.
சாதாரண தரத்தில் படிக்கும் போது சராசரி புள்ளிபெற்ற மாணவன் உயர்தரத்தில் அதிக புள்ளி பெறுவதும் சிறந்த புள்ளி பெற்ற மாணவன் உயர்தரத்தில் சித்தியடையாமல் போவதையும் கண்டிருக்கிறோம். அவ்வாறு இருக்க உயர்தரத்தில் இப்படி தெரிவு செய்து மாணவர்களை எடுக்கும் போது அது சிறந்த தெரிவாக இருக்க முடியுமா? எல்லோருக்கும் இலவசக் கல்வி என்று சொல்வது இதில் வெறும் போலியே. வெறும் பத்து வீதத்துக்கும் குறைவானவர்களுக்கே இங்கே இலவசக் கல்வி முழுமையாகக் கிடைக்கிறது.
இது திட்டமிட்ட ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது இதற்குப் பின்னால் பாரிய அரசியல் இருக்கிறது இதுபற்றி எந்த அரசியல் செயற்பாடும் இல்லை பதின் வயதில் தங்கள் கல்வியை இழக்கும் 90 சதவீதமான இளைஞர் யுவதிகள் அடுத்த இலக்கு இல்லாது தவிக்கிறார்கள் அவர்களை சில தொழிற்சாலைகள் குறைந்த ஊதியத்துக்கு அடிமைகளாக எடுத்துச் செல்கிறது மற்றும் சில வெளிநாட்டுக்கும் கூலி வேலைக்கும் அடிமைகளாகவே செல்கிறார்கள்.
இங்கே கல்வி என்பது தொழில் பெறும் நோக்கத்துக்காக ஒரு போட்டியாக இருப்பதால் யாரும் இதை கவனிப்பதில்லை கல்வி என்பது பொதுவுடமை இது எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் வெறும் பத்து வீதமானவர்களின் கனவுகளை நனவாக்க கூடாது இதனால் தான் தனியார் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி இலவசக் கல்வி நாட்டில் பாரிய நெருக்கடியை ஏழைமக்களுக்கு கொடுத்துள்ளது. இதனால் இன்னும் கல்வி பாரிய நெருக்கடியை சந்திக்கிறது போட்டிதான் கல்வித் தேர்ச்சி என்று வரும்போது ஏழை மாணவர்கள் தனியார் கல்விக் கூடங்களுக்கு போக முடியாத நிலையில் அவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.
பாடசாலைகளை குறை சொல்லும் நோக்கமல்ல பாடசாலைகளை காட்டிலும் தனியார் கல்விநிலையங்களில் கூட்டம் கூடக்காரணம் என்ன ? இது இலவசக் கல்வியா? பாடசாலை ஆசிரியர்களே அங்கும் கல்வி கற்பிக்கிறார்கள் இதுவே வேதனையான விடையமாக இருக்கிறது. ஒரு அரச துறையில் பணிசெய்யும் ஒருவர் விவசாயியாக தனியார் துறை ஊழியராக ஒரு பகுதிநேர ஊழியராக பணியாற்றுகிறார்.
இதனால் எது பாதிப்படைகிறது என்ற கேள்வி எழுகிறது மருத்துவத்துறை மற்றும் கல்வித்துறையே அதிகம் இதில் செல்வாக்கு செலுத்துகிறது. இவை இரண்டும் நாட்டின் வளர்ச்சியில் இரு கண்கள் ஆனால் இரண்டும் புண்பட்ட கண்களாக இருப்பது வேதனை எங்கோ சிலரின் தூய்மையான பணி எமக்கான எதிர்கால ஒளியாகவும் இருக்கிறது.
வட்டக்கச்சி வினோத்