அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனத்தைச் (NASA) சேர்ந்த இரு விண்வெளி வீரர்கள் தெரியாமல் கீழே போட்ட கருவிகளைக் கொண்ட பை மிதந்துகொண்டே இருக்கிறது.
ஜாஸ்மின் மோக்பெலியும் (Jasmin Moghbeli) லோரல் ஓ ஹாராவும் (Loral O’Hara) சர்வதேவ விண்வெளி நிலையத்தைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இருவரும் நிலையத்திற்கு வெளியே சுமார் 7 மணிநேரத்திற்கு மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பை விண்வெளிக் குப்பையாய் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதைப் பூமியிலிருந்து தொலைநோக்கியைக் கொண்டு காணமுடியும் என்றும், வரும் மாதங்களில் அது பூமிக்குள் வரும் என்றும் அப்போது அது எரிந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.