செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு கோட்டா, மஹிந்த, பஸிலே காரணம்! – உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

பொருளாதார நெருக்கடிக்கு கோட்டா, மஹிந்த, பஸிலே காரணம்! – உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

1 minutes read

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச உள்ளிட்டோரே காரணமானவர்கள் என்று உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும், இவர்கள் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளனர் என்றும் அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஸ்மன், நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆர்டிகலா, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபை உறுப்பினர்கள் ஆகியோரும் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்று உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம் ராஜபக்ஷக்களுக்கு எதிரான தீர்ப்பு வழங்கபட்டுள்ளது.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன உள்ளிட்ட குழுவினர், நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி இரண்டு அடிப்படை உரிமை மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுக்களை விசாரித்த, ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமின் பெரும்பான்மையான நீதியரசர்களின் தீர்மானத்துக்கமைய இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பிரதிவாதிகள் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை என்று உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இருப்பினும் மனுதாரர்களுக்குத் தலா ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவைச் செலவுத் தொகையாக வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான முர்து பெர்னாண்டோ, புவேனக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு  இடம்பெற்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More